Magaram Rasi Weekly Palan in Tamil 2020
Magaram Rasi/ மகர ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020):
செய்யும் செயல்களில் உற்சாகம் காட்டும் மகர ராசி அன்பர்களே!
Magaram Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020
உத்தியோகஸ்தர்கள் அலுவலக விஷயங்களில் திருப்திகரமான பலன்களைக் காண்பார்கள். குடும்பத்தில் ஏற்படும் பிரச்சினைகளை, பெண்களே சமாளித்து நிம்மதியை ஏற்படுத்துவார்கள். பெண்கள் மகிழ்ச்சி கொள்ளும் வகையில் தாய்வழி சொந்தங்கள் மூலம் சுபநிகழ்ச்சி நடைபெறும். கலைஞர்கள் தொடர்ந்து முயல்வதன் மூலம் சில வாய்ப்புகளைப் பெறுவார்கள். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். அலைச்சல், கடின உழைப்புகளுக்கு பலன்
உண்டு. ஓய்வெடுத்துக் கொள்வதன் மூலம் உடல் நலத்தைக்காத்துக் கொள்ளலாம். மாணவர்களின் படிப்பு ஆர்வம் பலராலும் பாராட்டப்படும்.
கூட்டுத் தொழில் வியாபாரம் ஓரளவு லாபகரமாகவே நடைபெறும். தொழிலில் சில சிரமங்களைச் சந்தித்தாலும், தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அவற்றைச் சமாளிப்பீர்கள். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயர வழியுண்டு. எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளால், தனவரவு ஏற்படும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெற இடமுண்டு. உறவினர் வருகை மகிழ்ச்சி தரும். அவசியமான செலவுகளை மட்டும் மேற்கொள்ளுங்கள். ஆபரணச் சேர்க்கை உண்டு.
இந்த வாரம் வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை வில்வத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் நன்மைகள் கூடும்.
சந்திராஷ்டமம்:-உத்திராடம்: ஞாயிற்றுக்கிழமை காலை 4.57 மணி முதல் மறுநாள் காலை 3.32 மணி வரை, திருவோணம். திங்கட்கிழமை அதிகாலை 3.33 மணி முதல் திங்கட்கிழமை இரவு 2 மணிவரை, அவிட்டம்: திங்கட்கிழமை இரவு2.01 மணி! முதல் செவ்வாய்க்கிழமை இரவு 12.22 மணி வரை,
Weekly importance dates/ வார வழிகாட்டி:
6.3.2020 – சர்வ ஏகாதசி
7.3.2020 – சனி பிரதோஷம்
8.3.2020 – மாசி மகம்
9.3.2020 – ஹோலி பண்டிகை
10.3.2020 – துர்க்கை வழிபாடு செய்யலாம்
11.3.2020 – புதிய விதைகள் விதைக்கலாம்
12.3.2020 – சங்கடஹர சதுர்த்தி