For a better experience please change your browser to CHROME, FIREFOX, OPERA or Internet Explorer.

Thulam Rasi Weekly Palan in Tamil

Thulam Rasi/ துலா ராசி Weekly Palan in Tamil (06-03-2020 to 12-03-2020):

முன்னெச்சரிக்கை குணம் நிறைந்த துலா ராசி அன்பர்களே!

Thulam Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020

உங்கள் முயற்சிகள் பெரும்பாலானவை வெற்றி பெறும். அவ்வப்போது ஏற்படும் சிறுசிறு சங்கடம் பாதிப்பு எதையும் ஏற்படுத்தாது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு, உயர் அதிகாரிகளின் ஆதரவு நல்ல முறையில் இருந்து வந்தாலும், உங்கள் பணிகளின் மூலம் அவர்களைத் திருப்திப்படுத்த வேண்டியது அவசியமான ஒன்று. சொந்தத் தொழில் செய்பவர்கள், சில சிரமங்களைச் சந்தித்தாலும் தொழிலாளர்களின் ஒத்துழைப்பால் அவற்றைச் சமாளிப்பீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரத்தில் குறைந்த பட்சலாபம் கிடைக்கும். மாணவர்கள் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். அரசியல்வாதிகள் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.

Thulam Rasi Palan

கலைஞர்களுக்கு குடும்பத்தில் பிரச்சினைகள் எதுவும் வராது. என்றாலும் பெரியவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடப்பது நல்லது. குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்க வாய்ப்பிருக்கிறது. மகன் அல்லது மகளால் மனக்கலக்கம் ஏற்பட்டு நிவர்த்தியாகும். கடன் கொடுக்கல் – வாங்கலில் நிதானப்போக்கு அவசியம். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதாக இருந்தால், தக்க நபர்களின் ஆலோசனைகளை கேட்டு செய்வது நல்லது. சுபநிகழ்ச்சி ஒன்றின் காரணமாக செலவுகள் ஏற்படும். வீட்டில் குடிநீர், குழாய் போன்றவற்றை சரி செய்ய எதிர்பாராத செலவு நேரிடும். கணவன்-மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு மறைய வேண்டுமானால், ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். பிள்ளைகளால் உதிரி வருமானம் உண்டு.

இந்த வாரம் திங்கட்கிழமை அன்று விநாயகப்பெருமானுக்கு அருகம்புல்லால் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் தடைகள் விலகும்.

Weekly importance dates/ வார வழிகாட்டி:

6.3.2020 – சர்வ ஏகாதசி
7.3.2020 – சனி பிரதோஷம்
8.3.2020 – மாசி மகம்
9.3.2020 – ஹோலி பண்டிகை
10.3.2020 – துர்க்கை வழிபாடு செய்யலாம்
11.3.2020 – புதிய விதைகள் விதைக்கலாம்
12.3.2020 – சங்கடஹர சதுர்த்தி

leave your comment


Your email address will not be published. Required fields are marked *

February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
Top