Kadaga Rasi Weekly Palan in Tamil
Kadaga Rasi/ கடக ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020):
நேர்மையுடன் பழகும் குணம் கொண்ட கடக ராசி அன்பர்களே!
Kadaga Rasi: 6th Mar. 2020 to 12th Mar. 2020
உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். அதன் மூலம் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளுக்காக தீவிரமாக முயற்சிப்பீர்கள். ஒரு சிலர் வெளிநாடு சென்று வரும் வாய்ப்பைப் பெறுவார்கள். மருத்துவப் பொருட்கள், உணவுப்பொருட்கள் போன்றவை நன்கு வியாபாரமாகி, வியாபாரிகளுக்கு கூடுதல் மகிழ்ச்சி தரும். சொந்தத் தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளர்களிடம் கனிவாக நடந்து கொண்டால் தொடர்ந்து வாய்ப்புகளைப் பெறலாம். பணியாளர்களிடம் கனிவாகவும், உண்மையாகவும் பேசி, அவர்களை ஒற்று
மைப் படுத்துவது அவசியம். மாணவர்கள் வகுப்பில் முன்னணி இடத்தை அடையக்கூடிய வகையில், படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவீர்கள்.
புதிய இடம் வாங்குவது, புதிய வீடு கட்டுவது போன்ற திட்டங்கள் இருந்தால், அதை தற்போதைக்கு தள்ளிப்போடுவது நல்லது. பணப் புழக்கத்தில் சரளமான போக்கைக் காண்பது கடினம். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். கடன் கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் இருக்கிறது. என்றாலும் இப்போது கடன் வாங்காமல் இருப்பது தான் உங்களுக்கு நன்மையைத் தரும். குடும்பத்தில் புத்திர வழி|யில் மருத்துவச் செலவுகள் ஏற்படும். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சிறு உபாதை தோன்றினாலும் உடனே மருத்துவரை அணுகுங்கள். பெண்களுக்கு சேமிப்பு
செலவழியக்கூடிய சூழ்நிலைகள் தென்படுகிறது. இல்லத்தில் இனிமை கூடும்.
இந்த வாரம் சனிக்கிழமையன்று நவக்கிரக சன்னிதியில் உள்ள சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிட்டு வழிபட்டால் பிரச்சினைகள் அனைத்தும் விலகும்.
Weekly importance dates/ வார வழிகாட்டி:
6.3.2020 – சர்வ ஏகாதசி
7.3.2020 – சனி பிரதோஷம்
8.3.2020 – மாசி மகம்
9.3.2020 – ஹோலி பண்டிகை
10.3.2020 – துர்க்கை வழிபாடு செய்யலாம்
11.3.2020 – புதிய விதைகள் விதைக்கலாம்
12.3.2020 – சங்கடஹர சதுர்த்தி