Kanni Rasi Weekly Palan in Tamil
Kanni Rasi/ கன்னி ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020):
உயர்வான எண்ணம் கொண்ட கன்னி ராசி அன்பர்களே!
Kanni Rasi: 6th Mar. 2020 to 12th Mar. 2020
வீடுசம்பந்தமான பிரச்சினை தீருவதுடன், பரம்பரை சொக்கை அடையும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு அசையாத சொத்துகள் லாபம் தரும். அது பூமியாகவோ அல்லது கட்டிய வீடாகவோ இருக்கலாம். பல நாட்களாக எதிர்பார்த்து வந்த, ஏதோ ஒரு விஷயத்தில் வெற்றி கிடைக்கும். நெருப்பில் பணிபுரிபவர்கள் தங்களை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும். குறிப்பாக இடது கண்ணில் பாதிப்பு தோன்றலாம் என்பதால் கவனமாக செயல்படுங்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மருத்துவரை அணுக நேரிடும்.
ஆன்மிக பயணம் செல்வதற்கான வாய்ப்பு உங்களைத் தேடி வரக்கூடும். நீண்ட நாட்களாக தரிசிக்க நினைத்த தெய்வத்தை தரிசிப்பதற்கான வாய்ப்பை பெறுவீர்கள். தொலைபேசி வாயிலாக நல்ல செய்தி ஒன்று வந்து சேரும். யாருக்காகவும், எதற்காகவும் ஜாமீன் கையெழுத்துப் போடுவதை தவிர்ப்பது உங்களுக்கு நல்லது. பழைய நகைகளை புதுப்பிக்க மற்றும் வாகனங்களை புதியதாக வாங்க வாய்ப்பு உருவாகும். மின்சார உபகரணங்களை ஜாக்கிரதையாக கையாளுங்கள். எந்த காரியத்தையும் செய்யும் முன்பாக, நம்பிக்கையுள்ளவர்களிடம் கலந்து ஆலோசித்து முடிவு எடுங்கள். வழக்கமான உங்கள் பணிகளையோ, பூஜைகளையோமாற்றிக் கொள்ளவேண்டாம். காரியம் + கைகூடப் போகும் காலம் இது என்பதால், மற்றவர்களுக்கு அறிவுரை கூறும் போது நிதானமாக செயல்படுங்கள்.
இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்து வந்தால், நினைத்த காரியம்
கைகூடும்.
Weekly importance dates/ வார வழிகாட்டி:
6.3.2020 – சர்வ ஏகாதசி
7.3.2020 – சனி பிரதோஷம்
8.3.2020 – மாசி மகம்
9.3.2020 – ஹோலி பண்டிகை
10.3.2020 – துர்க்கை வழிபாடு செய்யலாம்
11.3.2020 – புதிய விதைகள் விதைக்கலாம்
12.3.2020 – சங்கடஹர சதுர்த்தி