Mithuna Rasi Weekly Palan in Tamil
Mithuna Rasi/ மிதுன ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020):
எந்த செயலையும் அழகாக செய்யும் மிதுன ராசி அன்பர்களே!
Mithuna Rasi: 6th Mar. 2020 to 12th Mar. 2020
தெய்வ பலன் மிகுதியாய் அமைந்த வாரம் இது. நீங்கள் எடுக்கும் காரியத்தில் இறுதியில் வெற்றியையே பெறுவீர்கள். தடைகள் வந்தாலும் எல்லாம் நன்மையாகவே முடியும். அவசரப்படாமலும், ஆத்திரப்படாமலும் பொறுமையாக நடந்துகொண்டால் சிக்கல்கள் உங்களை அணுகாது. சொந்தத் தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றம் காண்பார்கள். எச்சரிக்கையாகவும், தொழிலாளர்களிடம் சுமுகமாகவும் பழகி வந்தால், போட்டி நிறுவனங்களின் நடவடிக்கைகளால் பாதிப்பு உண்டாகாது. எழுத்து மற்றும் பத்திரிகை துறையினர் மிகுந்த முன்னேற்றமும், பொருளாதார நிலையில் உயர்வையும் காண்பார்கள்.
பெண்களுக்கு வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. ஆடை, ஆபரணச் சேர்க்கை மகிழ்ச்சியளிப்பதாக இருக்கும். சகோதர வழியில் உதவியை எதிர்பார்க்க முடியாது. வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்பு சிலருக்கு உண்டாகலாம். குடும்பத்தில் சுபநிகழ்ச்சி ஒன்று நடைபெறுவதன் மூலமாக, பிரிந்து சென்ற உறவினர்கள் மீண்டும் வந்து இணைவார்கள். வேலைக்குப் போகும் பெண்கள், உத்தியோகத்’கில் எதிர்பாராத முன்னேற்றத்தை காணமுடியும், வாயுப்பிடிப்பு, வயிற்று வலியால் சிலர் அவதிப்பட்டு மீள்வார்கள். தொலைகாரத்தில் இருந்து நல்ல தகவல்களைப் பெறுவீர்கள். கலைஞர்கள் கவனமாகவும், நிதானமாகவும் நடந்துகொள்வதன் மூலம் பிரச்சினைகளைத் தவிர்க்கலாம். கணவன்- மனைவி இருவரும் விட்டுக் கொடுத்துச் சென்றால், குடும்பத்தில் அமைதி நிலவும்.
இந்த வாரம் வியாழக்கிழமை அன்று தட்சிணாமூர்த்தியை
வழிபாடு செய்து வந்தால், வாழ்வில் சுபீட்சம் உண்டாகும்.
Weekly importance dates/ வார வழிகாட்டி:
6.3.2020 – சர்வ ஏகாதசி
7.3.2020 – சனி பிரதோஷம்
8.3.2020 – மாசி மகம்
9.3.2020 – ஹோலி பண்டிகை
10.3.2020 – துர்க்கை வழிபாடு செய்யலாம்
11.3.2020 – புதிய விதைகள் விதைக்கலாம்
12.3.2020 – சங்கடஹர சதுர்த்தி