Vrischika Rasi Weekly Palan in Tamil
Vrischika Rasi/ விருச்சிக ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020):
அதிக உழைப்பை வெளிப்படுத்தும் விருச்சிக ராசி அன்பர்களே!
Vrischika Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020
உத்தியோகத்தில் இருப்பவர்கள், இன்னும் சில காலங்களுக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உள்ளிட்ட மாற்றங்களைப் பற்றி சிந்திக்க வேண்டாம். உயர் அதிகாரிகளை உங்கள் திறமையால் திருப்திப்படுத்துவீர்கள். உங்கள் பணிகளில் மிகக் கவனமாக இருங்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருந்து வரும். சொந்தத் தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் படிப்படியாக முன்னேற்றத்தைக் காணலாம். கலைஞர்களும், மாணவர்களும் ஓரளவு சுறுசுறுப்பாகவே இயங்கி வருவீர்கள். கலைஞர்கள் பெரும்பாலும் வெளியூர் பயணங்களைத் தவிர்த்து விடுங்கள்.
குடும்பத்தில் அவ்வப்போது பிரச்சினை தலைதூக்கினாலும், சிக்கல் நேராமல் பெண்கள் சாமர்த்தியமாக நிர்வகிப்பார்கள். ஆலய தரிசனம் செய்வீர்கள். வாகனங்களில் செல்லும் போது நிதானம் தேவை. முக்கிய ஆவணங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதும், நீதிமன்ற வழக்கு விவகாரங்களிலும் கவனமாக இருங்கள். நெருப்புக்கு அருகிலும், மின்சாதனங்களுக்கு அருகிலும் பணியாற்றுவோர், மிகுந்த எச்சரிக்கையோடு பணியாற்றுங்கள். கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். பிள்ளைகளால் ஒரு சிலருக்கு உதிரி வருமானங்கள் வந்துசேரும்.
இந்த வாரம் வெள்ளிக்கிழமை நவக்கிரக சன்னிதியில் உள்ள சுக்ர பகவானுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், உங்கள் துன்பங்கள் விலகும்.
சந்திராஷ்டமம்:- விசாகம், அனுஷம் நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை. கேட்டை: வெள்ளிக்கிழமை
காலை 6.52 மணி வரை.
Weekly importance dates/ வார வழிகாட்டி:
6.3.2020 – சர்வ ஏகாதசி
7.3.2020 – சனி பிரதோஷம்
8.3.2020 – மாசி மகம்
9.3.2020 – ஹோலி பண்டிகை
10.3.2020 – துர்க்கை வழிபாடு செய்யலாம்
11.3.2020 – புதிய விதைகள் விதைக்கலாம்
12.3.2020 – சங்கடஹர சதுர்த்தி