Meenam Rasi Palan Weekly in Tamil 2020
Meenam Rasi/ மீன ராசி Palan Weekly in Tamil(06-03-2020 to 12-03-2020):
சாமர்த்தியமாக பேசி காரியம் சாதிக்கும் மீன ராசி அன்பர்களே!
Meenam Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020
உங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும் என்று சொல்வதற்கில்லை. கூடுமானவரை சமயோசிதமாகவும், பொறுமையாகவும் நடந்து கொள்வதால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். கலைஞர்கள், சகக்கலைஞர்களிடம் சுமுகமாகப் பழகி வருவதன் மூலம் நற்பெயர் பெறுவீர்கள். தொழில் பிரிவினர் கூட்டுத் தொழிலில் திருப்தி காணமுடியாது. கூட்டாளிகளில் ஒருவர் உங்களை விட்டு பிரிந்து செல்லக்கூடும். சொந்தத் தொழிலில் சிரமங்கள் இருந்தாலும் முன்னேற்றப் போக்கைக் காணமுடியும். மாணவர்கள் ஓரளவு உற்சாகமாகவே காணப்படுவார்கள்.
உத்தியோகஸ்தர்கள் அலுவலகம் தொடர்பான விஷயங்களில் முழுமையான திருப்தியடைய வழியில்லை. அதே நேரம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரத்தில் பிரச்சினை ஏதும் இருக்காது. புதிய ஆட்களை வேலையில் சேர்க்கும்போது கவனம் தேவை. குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும், பெண்களின் சாமர்த்தியத்தால் உடனே நிவர்த்தியாகிவிடும். பயணங்களைத் தள்ளிப் போடுவதோ அல்லது தவிர்ப்பதோ நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம். மனைவி வழி உறவினர்களின் ஒத்துழைப்பு தக்க சமயத்தில் கிடைக்கும். அரசியல் தொடர்புடைய நண்பர்களின் ஒத்துழைப்பால் சில அனுகூலங்கள் ஏற்படக்கூடும்.
இந்த வாரம் சனிக்கிழமை அன்று ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை அணிவித்து வழிபாடு செய்து வந்தால், இன்னல்கள் அனைத்தும் உங்களை விட்டு விலகும்.
சந்திராஷ்டமம்:- பூரட்டாதி: புதன்கிழமை இரவு 10.45 மணி முதல் வியாழக்கிழமை இரவு 9.09 மணி வரை, உத்திரட்டாதி, ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் இல்லை.
Weekly importance dates/ வார வழிகாட்டி:
6.3.2020 – சர்வ ஏகாதசி
7.3.2020 – சனி பிரதோஷம்
8.3.2020 – மாசி மகம்
9.3.2020 – ஹோலி பண்டிகை
10.3.2020 – துர்க்கை வழிபாடு செய்யலாம்
11.3.2020 – புதிய விதைகள் விதைக்கலாம்
12.3.2020 – சங்கடஹர சதுர்த்தி