Dhanus Rasi Weekly Palan in Tamil
Dhanus Rasi/ தனுசு ராசி Weekly Palan in Tamil (06-03-2020 to 12-03-2020):
கவலைகளை வெளிக்காட்டாத தனுசு ராசி அன்பர்களே!
Dhanu Rasi: 6th Mar. 2020 to 12th Mar. 2020
நிதானமும் பொறுமையும் தேவைப்படும் வாரம் இது. உங்கள் பணிகளில் வெற்றிபெற நீங்கள் திட்டமிட்டுப் செயல்படுதல் அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முயற்சிகளை மேற் கொள்வதன் மூலம் உங்களுடைய விருப்பங்கள் நிறைவேறும். தொழில் செய்பவர்கள், தங்கள் துறையில் முன்னேற்றமான போக்கைக் காணமுடியும். ஓய்வின்றி உழைத்து, வாடிக்கையாளர்களின் பாராட்டுக்களைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் திருப்தியான லாபத்தை வழங்கும். பெண்களின் நிர்வாகம் குடும்பத்தில் அமைதியை ஏற்படுத்தும்.
பெண்களுக்கு தாய்வழி சொந்தங்கள் மூலம் நிதி சேர்க்கை வரும். கலைஞர்கள் விருந்துகள், கேளிக்கைகளில் கலந்து
கொண்டு மகிழ்வீர்கள். கோபத்தைக் குறைத்துக் கொள்வதும், எல்லோரிடமும் இனிமையாய் பேசி வருவதும் பிரச்சினையைத் தவிர்க்கும். வீடு, வாகனங்கள் புதியதாக வாங்க முயற்சி மேற்கொள்வீர்கள். நீண்ட காலம் சந்திக்க நினைத்த ஆன்மிக பெரியோரை சந்திப்பீர்கள். குலதெய்வக் கோவிலுக்கு செல்வதற்கு வாய்ப்பு உண்டாகும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை பலப்படும்.
இந்த வாரம் திங்கட்கிழமை அன்று சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்து வந்தால், மனசாந்தி உண்டாகும்.
சந்திராஷ்டமம்:- மூலம்: வெள்ளிக்கிழமை காலை 6.53 மணி முதல் சனிக்கிழமை அதிகாலை 6.03 மணி வரை, பூராடம்: சனிக்கிழமை காலை 6.04 மணி முதல் மறுநாள் காலை 4.56 மணிவரை. உத்திராடம்: ஞாயிற்றுக்கிழமை காலை 4.57 மணி முதல் மறுநாள் காலை 3.32 மணி வரை
Weekly importance dates/ வார வழிகாட்டி:
6.3.2020 – சர்வ ஏகாதசி
7.3.2020 – சனி பிரதோஷம்
8.3.2020 – மாசி மகம்
9.3.2020 – ஹோலி பண்டிகை
10.3.2020 – துர்க்கை வழிபாடு செய்யலாம்
11.3.2020 – புதிய விதைகள் விதைக்கலாம்
12.3.2020 – சங்கடஹர சதுர்த்தி