Mesha Rasi Weekly Palan in Tamil
Mesha Rasi/ மேஷ ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020):
நண்பர்களுக்கு உதவும் மனம் கொண்ட மேஷ ராசி அன்பர்களே!
Mesha Rasi: 6th Mar. 2020 to 12th Mar. 2020
கலைஞர்கள் சில புதிய வாய்ப்புகளைப் பெறுவார்கள். ஆனால் அந்த புதிய வாய்ப்புகளின் மூலமாக பொருளாதார நிலை உயருமா என்பது சந்தேகம்தான். கூட்டுத் தொழில் வியாபாரம் ஏற்ற இறக்கமாக இருக்கும். ஆனாலும் நஷ்டம் ஏற்பட வாய்ப்பில்லை . அதிக அளவில் பொருட்களை இருப்பு வைக்காதீர்கள். பெண்களுக்கு குடும்ப நிர்வாகத்தில் பொறுப்புகள் கூடுதலாக இருந்து வரும். என்றாலும் பக்குவமாக சமாளித்து விடுவீர்கள். அதிக அளவு ரொக்கப்பணத்துடனோ, விலை உயர்ந்த நகைகளுடனோ, தகுந்த பாதுகாப்பின்றி பயணம் செய்யாதீர்கள். மனைவி வழி உறவினர் உதவிக்கரம் நீட்டுவார்கள். பொருளாதார நிலையில் சில சங்கடங்களைச் சந்திக்க நேரிடும். சிக்கனமாக நடந்து கொள்வது அவசியம், அரசுப்பணியில் உள்ளவர்களுக்கு சிறு தொல்லை ஏற்பட்டு நீங்கும்.
இந்த வாரம் புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்குச் சென்று துளசியால் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால்,
இன்னல்கள் நீங்கி நற்பலன்கள் உண்டாகும்.
Weekly importance Dates/ வார வழிகாட்டி:
6.3.2020 – சர்வ ஏகாதசி
7.3.2020 – சனி பிரதோஷம்
8.3.2020 – மாசி மகம்
9.3.2020 – ஹோலி பண்டிகை
10.3.2020 – துர்க்கை வழிபாடு செய்யலாம்
11.3.2020 – புதிய விதைகள் விதைக்கலாம்
12.3.2020 – சங்கடஹர சதுர்த்தி