Rishaba Rasi Weekly Palan in Tamil
Rishaba Rasi/ ரிஷப ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020):
தர்மம் செய்வதில் ஈடுபாடு கொண்ட ரிஷப ராசி அன்பர்களே!
Rishaba Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020
பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. சான்றாலம் கொடுக்கல் – வாங்கலில் எச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்க அலை கலங்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு வேலைப்பளு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. உபா அதிகாரிகளின் ஆதரவு முழுமையாக இருந்தாலும் சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது கடினம். தொழில் மற்றும் வியாபாரத்தில் குறைந்தபட்ச முன்னேற்றம் உருவாகும். அது நாளடைவில் படிப்படியாக வளர்ச்சி பெறும். மாணவர்களின் கல்வி ஆர்வம் சிறப்பான முறையில் இருந்து
வரும். ஒரு சிலர் கல்வியோடு, விளையாட்டுத் துறையிலும் நல்ல முன்னேற்றம் காண்பார்கள்.
குடும்பத்தில் உள்ள முதியவர்களின் உடல் நலத்தில் அக்கறை செலுத்தி வருவதும் அவசியம், இதயம் தொடர்பான நோய்கள் சிலருக்குத் தொல்லைகள் தரும். பித்த வாந்தி போன்றவற்றால் சிலர் அவதிப்பட்டு குணமடைவீர்கள். கணவன்- மனைவிக்குள் இருந்த கருத்துவேறுபாடு மறையும். பிள்ளைகளால் பெருமை வந்து சேரும் தருணம் இது. இருப்பினும் அவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம். மகான்களின் தரிசனம் கிடைக்க வாய்ப்புண்டு. கலைஞர்களுக்கு தொழில்நுட்ப சிக்கல்களுக்கு நடுவிலும் பணப்புழக்கத்தில் சரளமான போக்கு
இருந்து வரும். சிலர் வெளிநாடுகளுக்குப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவார்கள். பெரும் முதலீடுகள் எதையும் இப்போது செய்யாமல் இருப்பது நல்லது.
இந்த வாரம் சனிக்கிழமை அன்று நவக்கிரக சன்னிதியில் உள்ள ராகு – கேதுவுக்கு நெய் தீபம் ஏற்றி அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால் மனசாந்தி கிடைக்கும்.
Weekly importance dates/ வார வழிகாட்டி:
6.3.2020 – சர்வ ஏகாதசி
7.3.2020 – சனி பிரதோஷம்
8.3.2020 – மாசி மகம்
9.3.2020 – ஹோலி பண்டிகை
10.3.2020 – துர்க்கை வழிபாடு செய்யலாம்
11.3.2020 – புதிய விதைகள் விதைக்கலாம்
12.3.2020 – சங்கடஹர சதுர்த்தி