Simma Rasi Weekly Palan in Tamil
Simmam Rasi/ சிம்ம ராசி Weekly Palan in Tamil(06-03-2020 to 12-03-2020):
நிர்வாகத்திறன் மிகுந்த சிம்ம ராசி அன்பர்களே!
Simma Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020
இதுவரை நீங்கள் சந்தித்து வந்த கஷ்டங்களில் இருந்து விடுபட்டு, உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களின் விருப்பங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறத் தொடங்கும். மறைமுக வருமானங்கள் மனதை மகிழ்விக்கும். தொழில், வியாபாரம் மிகவும் லாபகரமாக நடைபெறும். அதன் காரணமாக தொழிலை விரிவுபடுத்துவது பற்றி சிந்திப்பீர்கள். ஒரு சிலர் அந்த திட்டத்தை செயல்படுத்தி வெற்றியும் காண்பார்கள். கூட்டுத் தொழிலில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும். கூட்டாளிகளுடன் ஆலோசித்தே எந்த முடிவையும் எடுங்கள்.
குடும்பத்தில் நிம்மதிக்குக் குறைவிருக்காது. எல்லோருமே ஒற்றுமையாய் இருப்பதன் காரணமாக பிரச்சினைகளுக்கு இடமில்லை . தாய் வழி சொந்தங்கள் மூலம் குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு நடைபெறக்கூடும். நீண்டகாலம் நோயால் துன்புற்று வந்தவர்கள் இப்போது பூரணமாக அதில் இருந்து விடுபட்டு உடல் நலம் சீரடைவார்கள். பிறமொழி பேசும் ஒருவரின் நட்பு புதிதாக கிடைக்கும். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளையும், இதன் மூலம் பொருளாதார உயர்வையும் பெற்று மகிழ்வீர்கள். மாணவர்கள் படிப்பில் தீவிர அக்கறை செலுத்தி கல்வியில் முன்னணி நிலையை எட்டுவீர்கள். கடிதப் போக்குவரத்தின் மூலம் நன்மைகளை அடைவீர்கள். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு மறையும். பிள்ளைகளால் பிரச்சினைகளை
சந்திக்க நேரிடலாம். அவர்களை உங்களுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த வாரம் புதன்கிழமை அன்றுலட்சுமி நரசிம்மருக்கு துளசி இலையால் ஆன மாலை அணிவித்து வழிபாடு செய்து வந்தால் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும்.
Weekly importance dates/ வார வழிகாட்டி:
6.3.2020 – சர்வ ஏகாதசி
7.3.2020 – சனி பிரதோஷம்
8.3.2020 – மாசி மகம்
9.3.2020 – ஹோலி பண்டிகை
10.3.2020 – துர்க்கை வழிபாடு செய்யலாம்
11.3.2020 – புதிய விதைகள் விதைக்கலாம்
12.3.2020 – சங்கடஹர சதுர்த்தி