For a better experience please change your browser to CHROME, FIREFOX, OPERA or Internet Explorer.

Kumba Rasi Palan Weekly in Tamil 2020

Kumba Rasi/ கும்ப ராசி Palan Weekly in Tamil(06-03-2020 to 12-03-2020):

கலைகளில் ஈடுபாடு கொண்ட கும்ப ராசி அன்பர்களே!

Kumbha Rasi Palan: 6th Mar. 2020 to 12th Mar. 2020

அரசு வழியில் எதிர்பார்த்த அனுகூலங்கள் கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். வியாபாரம் லாபகரமாகவே இருக்கும். என்றாலும் அதிக அளவில் பொருட்களைக் கொள்முதல் செய்து இருப்பு வைத்திருப்பதால், வீண் விரயங்கள் உண்டாகும். பெண்களுக்கு ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. இருப்பினும் தங்க நகைகளில் பெருமளவு தொகைகளை முடக்கி வைக்க முயலாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள், உங்களுடைய பணியை மட்டும் செவ்வனே செய்து வந்தால் போதும். சக ஊழியர்களின் விஷயங்களில் மூக்கை நுழைக்காதீர்கள்.

Kumba Rasi Palan

கலைஞர்கள் உற்சாகம் அடையும் வகையில், உங்களின் நிலை மாற வழிபிறக்கும். குடும்பத்தில் சுபநிகழ்ச்சிகள் நடைபெறக் கூடிய சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வருகையால் ஆதாயம் கிடைக்கலாம். மகன் அல்லது மகள் வழியில் சிறுமனக்கலக்கம் தோன்றி மறையும். நல்ல தகவல் ஒன்று வந்து சேரக்கூடும். பணப்புழக்கத்தில் ஓரளவு திருப்தி காணப்படும். கொடுக்கல் – வாங்கலில் கவனம் தேவை. வாகனச் செலவு உண்டு .

இந்த வாரம் செவ்வாய்க்கிழமை அன்று விஷ்ணு துர்க்கையை குங்குமத்தால் அர்ச்சனை செய்து வழிபட்டு வந்தால், நன்மை உண்டாகும்.

சந்திராஷ்டமம்:- அவிட்டம்: திங்கட்கிழமை இரவு 2 மணி முதல் செவ்வாய்க்கிழமை இரவு 12.22 மணி வரை. சதயம்: செவ்வாய்க்கிழமை இரவு 12.23 மணி முதல் புதன்கிழமை இரவு 10.44 மணி வரை. பூரட்டாதி: புதன்கிழமை இரவு 10.45 மணி முதல் வியாழக்கிழமை இரவு 9.09 மணி வரை,

Weekly importance dates/ வார வழிகாட்டி:

6.3.2020 – சர்வ ஏகாதசி
7.3.2020 – சனி பிரதோஷம்
8.3.2020 – மாசி மகம்
9.3.2020 – ஹோலி பண்டிகை
10.3.2020 – துர்க்கை வழிபாடு செய்யலாம்
11.3.2020 – புதிய விதைகள் விதைக்கலாம்
12.3.2020 – சங்கடஹர சதுர்த்தி

Comments (1)


  1. love complicate

leave your comment


Your email address will not be published. Required fields are marked *

February 2022
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28  
Top